செய்திகள்

எனக்கு பயந்தே 19வது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது : மஹிந்த ராஜபக்ஷ

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலின் போட்டியிடுவேன் என எனக்கு பயந்தே 19வது திருத்தத்தில் ஜனாதிபதியொருவர் 2 தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெடிகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
19வது திருத்தம் எனக்கு பயந்தே தயாரிக்கப்பட்டுள்ளது. நான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று பயந்தே ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைக்கு மேல் போட்டியிட முடியாதவகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்குகிடையாது. ஏன அவர் தெரிவித்துள்ளார்.