செய்திகள்

எனக்கு வாக்களித்த 58 இலட்சம் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன்: மகிந்த

தனக்கு வாக்களித்த 58 இலட்சம் மக்களுக்காக தான் எப்போதும் குரல் கொடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாப்பஹுவ ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசீர்வாத போதிபூஜையில் பங்கேற்கக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது. போதி பூஜையின் ஊடாக நாட்டுக்கும் படைவீரர்களுக்கும் நல்லாசி வேண்டுகின்றோம். ஆட்சியாளர்களின் மனங்களிலிருந்து குரோதம், பொறாமை, பழிவாங்கும் எண்ணங்கள் இல்லாமல் போகவேண்டும் என வேண்டுகின்றோம்.

தொழில்களிலிருந்து நீக்கப்படும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மீளவும் தொழில் வழங்க இந்த ஆட்சியாளர்களுக்கு மனம் வர வேண்டும். எமக்கு வாக்களித்த 58 இலட்ச மக்களின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.