செய்திகள்

எனது அபிவிருத்திகளையும் சேர்த்து பார்த்தா என் குடும்பத்தின் சொத்து கணக்கிடப்படுகின்றது? : மஹிந்த கேள்வி

தனது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் சேர்த்தா தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினரின் சொத்தை மதிப்பிட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தின் 18 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் வெளிநாடுகளில் இருப்பதாக நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த நிலையில் நேற்று மாலை நாரஹேன்பிட்டி விகாரைக்கு சென்றிருந்த மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துறைமுகம் , விமான நிலையம் மற்றும் பெருந்தெருக்கள் போன்ற அபிவிருத்தி பணிகளையும் சேர்த்து பார்த்தா எனது குடும்பத்தின் சொத்தை கணக்கிடுகின்றனர் என சந்தேகிக்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.