செய்திகள்

எனது எதிர்கால செயற்பாடு குறித்து அடுத்தவாரம் மக்கள் அறிந்துகொள்ள முடியும்: சோமவன்ச

தனது எதிர்­கால நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அடுத்த வாரம் மக்கள் அறிந்து கொள்ள முடியும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியில் இருந்து வில­கி­யுள்ள அதன் முன்னாள் தலைவர் சோம­வன்ச அம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியில் இருந்து வில­கிய சோம­வன்ச அம­ர­சிங்க சில கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக தக­வல்கள் வெளி­யா­கின. அத்­துடன் ஜன­செத பெர­முன கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின. ஆனால் ஜன­செத பெர­முன கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­ட­வுள்­ள­தாக வெளி­யான செய்­தியில் உண்மை இல்லை என சோம­வன்ச அம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார்.

ஜன­செத பெர­முன கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய போதும் அக்­கட்­சியின் கீழ் தேர்­தலில் போட்­டி­யிட முடிவு செய்­ய­வில்லை என அவர் குறிப்­பிட்­டுள்ளார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் சகல பொறுப்­புக்­க­ளி­லி­ருந்தும் சோம­வன்ச அம­ர­சிங்க அண்­மையில் வெளி­யே­றி­யி­ருந்தார். எனினும் சோம­வன்ச அம­ர­சிங்­கவை கட்­சிக்குள் வைத்­துக்­கொள்­வ­தற்­காக தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர்.