செய்திகள்

எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம்: ஜோல் கார்னர்

அது ஓரு வித்தியாசமான உரையாடலாக அமைந்தது.

1983 உலகிண்ணபோட்டிகளின் இறுதியாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியை 183 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச்செய்த பின்னர் பவிலியனை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த ஜோல் கார்னர் சகவேகப்பந்து வீச்சாளரான மல்கம் மார்சலை நோக்கி அந்த கேள்வியை கேட்டுள்ளார்.

நான் மார்சலை பார்த்து இன்று நாங்கள் துடுப்பெடுத்தாவேண்டியிருக்குமா என கேட்டேன்?

மார்சலின் பதில் நான் எதிர்பாரததாக அமைந்தது,  ஆம் நானும் ஏன் நீரும் கூட துடுப்பெடுத்தாட வேண்டியிருக்கும் என்றார் அவர். எனக்கு அந்த பதில் ஆச்சரியமானதாக அமைந்தது, வெற்றிபெறுவதற்கு 184 ஓட்டங்களே பெற வேண்டும், பல தலைசிறந் துடுப்பாட்ட வீரர்களை கொண்ட மேற்கிந்திய அணியின் 8 வதும் 10 தாவதும் துடுப்பாட்டவீரர்கள் துடுப்பெடுத்தாட வேண்டிய நிலை வருமா என நான் நினைத்தேன்.

எனது முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தை பார்த்த மார்சல் ஓரு விடயத்தை தெளிவுபடுத்தினார்.  அவரது கணிப்பு எவ்வளவு தூரம் சரியானது என பின்னர் நான் வியந்தேன். அவர் தெரிவித்தது இது தான். 184 போன்ற சிறிய எண்ணிக்கையை பெற வேண்டிய நிலையில் ஆடும்போது அனைவர் மத்தியிலும் அலட்சியம் காணப்படும் தனக்கு பின்னர் வருவபவர் பார்த்துக்கொள்வார் என நினைப்பார்கள்.  இதனால் நாங்களும் துடுப்பெடுத்தாட வேண்டிவரும் என்றார் அவர்.

அவர் தெரிவித்தது போன்றே இருவரும் துடுப்பெடுத்தாடினோம். அவர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கார்னர் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காதிருந்தார். முதல் இரண்டு உலககிண்ணங்களை வென்ற மேற்கிந்திய அணி 140 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து இறுதியாட்டத்தில்எதிர்பாராமல் தோல்வியடைந்தது.

kapil Dev

அளவுக்கதிமான நம்பிக்கை காணப்பட்டது என தெரிவிக்கும் கார்னர், 183 ஓட்டங்களை இலகுவாக பெற்றுவிடலாம் என அணி எண்ணியதால், மிகக்குறைவாக மதிப்பிடப்பட்ட பந்துவீச்சாளர்களுக்கு இவர்கள் ஓருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர் என தெரிவித்தார். மார்சல் தெரிவித்தபடி நான் 124 ஓட்டங்களுக்கு அணி 8 விக்கெட்களை இழந்திருந்த வேளை உள்ளே நுழைந்தேன்.  மல்கம் மார்சல் ஆட்டமிழந்து வெளியேற  நான் உள்ளே நுழைந்தேன். அவர் களத்திலிருந்து வெளியேறும்போது எனது கண்களை உற்றுபார்த்துவிட்டு சென்றார்.

அந்த தோல்வி மேற்கிந்திய அணி மீது கடும் தாக்கத்தை உருவாக்கியது. அலட்சியமாக இருந்தமைக்கான அளவுக்திகமான விலையை நாங்கள் செலுத்தினோம் என மார்சல் பின்பு தனது சுயசரிதையில் எழுதினார்.  அணிதலைவர் கிளைவ்லொயிட் பின்னர் அதனை ஏறறுக்கொண்டார். தனது அணி சிறிய இலக்கை அலட்சியமாக அணுகியது என்றார்.

கார்னருக்கு அந்த தோல்வி மிகுந்த சீற்றத்தை உண்டுபண்ணியது. தோல்வியடைந்ததும் நான் எனது உடமைகளை எடுத்துக்கொண்டு பரிசுகள் வழங்கப்படும் இடத்திற்கு சென்றேன். பின்னர் அங்கிருந்து வெளியேறி மதுபான சாலைக்கு சென்றேன். சகலதும் முடிவடைந்த பின்னர் அடுத்த சில மாதங்களுக்கு நான் அணியை சேர்ந்த எவருடனும் பேசவில்லை.
எனது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய ஏமாற்றம் 1983 இறுதிப்போட்டி தான் என கார்னர் குறிப்பிட்டார்.