செய்திகள்

எனது கிரிக்கெட் வாழ்வின் ஓவ்வொரு துளியையும் அனுபவித்துள்ளேன்: மஹேல

மஹேல ஜெயவர்த்தனாவும் அவரதுநெருங்கிய நண்பர் குமார் சங்ககாரவும் மிகவும் மகிழ்ச்சிகரமான பிரியாவிடையையே எதிர்பார்த்தனர். எனினும் இருவராலும் இன்று தென்னாபிரிக்காவுடனான போட்டியில் அணியின் தலைவிதியை மாற்ற முடியவில்லை.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவினை ஏற்கனவே அறிவித்துள்ள மஹேல,அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாடியது குறித்து தான் கவலையடையவில்லை என குறிப்பிட்டார்.

நாளை சற்று வித்தியாசமாக சற்று அதிகநேரம் உறங்குவேன்,நான் கிரிக்கெட் உலகை தவறவிட்டது போல உணருவேன் ஆனால் அதுவே யதார்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்பது எனக்கு தெரியும்,நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஓவ்வொரு துளியையும் அனுபவித்துள்ளேன்.இந்த வீரர்களுடன் விளையாடுவது அற்புதமான விடயமாக அமைந்தது.சில அற்புதமான நட்புகள் கிடைத்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் அடையும் மாற்றங்களுக்கு ஏற்ப நானும் மாற்றமடைவதே கடினமானதாக காணப்பட்டது.கிரிக்கெட்டில் ஓவ்வொரு நாளும் ஏதாவது மாற்றமடைந்துகொண்டிருக்கின்றது.ஆகவே நீங்கள் தொடர்ந்தும் விளையாடவேண்டுமானால் நீங்கள் உங்களை அதற்கு ஏற்ப தயார் படுத்தவேண்டியிருந்தது, அதுவே மிகவும்கடினமான விடயம்.என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

உங்கள் அணிவீரர்களுடன் மகிழ்ச்சியாகயிருப்பதே முக்கியமான விடயம்,அதுவே மிகவும் திருப்தியளிக்ககூடிய விடயம்,ஓவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தன்னுடைய சகாக்களுடன் நேரத்தைசெலவிடுவதும், அவர்களுடன் இணைந்து விளையாடுவதுமே பிடித்த விடயம்.

1997 லிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் கிரிக்கெட் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது,இன்றைய பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள் அவர்கள் பலவகையான பந்துகளை வீசுகின்றனர்,நான் விளையாட ஆரம்பித்த காலப்பகுதியில் ஓரிரு பந்துவீச்சாளர்களிடம் மாத்திரம் பலவகையான பந்துகளை வீசும் திறமை காணப்பட்டது. துடுப்பாட்ட வீரர்கள் கூட பலவகையான சொட்களை ஆடுகின்றனர்.ஆகவே திறமை என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் கிரிக்கெட் நிச்சயமாகமுன்னேறியுள்ளது.தந்திரோபாயங்கள் மாறியுள்ளன,களத்தடுப்பு வியூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.கிரிக்கெட்டை மக்கள் பார்க்கும் விதம் மாறியுள்ளது. உங்களுடைய பலங்கள் பலவீனங்கள் எது என்பது தெரிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.