செய்திகள்

என்னுடைய சூப்பர் ஹீரோ கமல்ஹாசன்! குஷ்பு உருக்கம்

கமல்ஹாசன் நடித்துள்ள படம் உத்தம வில்லன்.

இந்தப் படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், ஊர்வசி, சித்ரா லட்சுமணன், இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஷம்தத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படம் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் ரிலீஸசாகியுள்ளது.

இந்நிலையில் குஷ்பு இப்படத்தை பார்த்து விட்டு தன் டுவிட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், “கமல் சாருடன் இணைந்து உத்தமவில்லன் படத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. விஷூவல், வசனம், நடிப்பு என அனைத்தையும் பார்த்து பிரமித்துவிட்டேன். கமல்ஹாசனை ஏன் மாஸ்டர் என்று சொல்கிறோம் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

ஒவ்வொரு காட்சியைப் பார்த்தாலே தெரிகிறது. அவரது கண்கள் அவ்வளவு பேசுகின்றன. படத்தின் கடைசிக் காட்சியைப் பார்த்து முடித்ததும் நான் கமல் சார் காலைத் தொட்டு வணங்கினேன். என்னுடைய சூப்பர்ஹீரோ கமல்ஹாசன் என்று இவ்வாறு நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.