செய்திகள்

என்னை கலாய்க்கின்றார்கள்…

இதற்கு முன்பு காதல், காமெடி, ஹாரர் கதைகளாக நடித்து வந்த கிருஷ்ணா, வீரா திரைப்படத்தில் சமூக நோக்கம் கொண்ட கதையில் நடித்து வருகிறாராம். கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறுகையில், இந்த வீரா திரைப்படத்தில் என்னை நடிக்கக் கேட்டபோது மிகுந்த சந்தோசமடைந்தேன். காரணம், நான் ரஜினியின் தீவிரமான ரசிகை. அதனால் அவர் நடித்த ஒரு சூப்பர் ஹிட் திரைப்பட டைட்டீலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய உற்சாகத்தை கொடுத்தது. கிருஷ்ணாவும், கருணாகரனும் அடிக்கடி என்னை கலாய்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

நடிக்கத் தொடங்கிய நாள் முதலே அவர்கள் நண்பர்களாகி விட்டதால் படப்பிடிப்பில் நேரம் போவதே தெரியவில்லை. இந்த திரைப்படத்தில் நான் நடிக்கும் கேரக்டர் பற்றி எதுவும் சொல்ல முடியாது. காரணம், கேரக்டர் பற்றி யாரிடமும் வாய் திறக்கக் கூடாது என்று எனக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கிறார்கள் என்று கூறும் ஐஸ்வர்யாமேனன், மலையாளத்தில் நான் ஹோம்லியான நடித்திருந்தபோதும், தமிழைப்பொறுத்தவரை கதைக்கேற்ற கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார்.

N5