செய்திகள்

என்னை தேர்தலில் தோற்கடித்த பின்னணியில் றோ , சி. ஐ. ஏ , எம். ஐ 6 மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்கள்: மஹிந்த குற்றச்சாட்டு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு பின்னணியில் நின்று இந்தியாவின் ‘றோ, அமெரிக்காவின் சி.ஐ.ஏ , பிரித்தானியாவின் எம். ஐ 6 மற்றும் மேற்கு நாடுகளின் உளவு அமைப்புக்கள் செயற்ப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது அவரது அரசாங்கமோ இதற்கு பொறுப்பு அல்ல என்று .கூறியிருக்கிறார்.

‘த இந்துவுக்கு’ அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர், இந்த சூழ்ச்சி குறித்து அறிந்தவுடன் இந்திய அரசாங்கத்துக்கு தெரிவித்ததாகவும், தேர்தலுக்கு முன்னர் ஒரு ‘றோ’ பிரசன்னத்தை அறிந்தவுடன் அவரை வெளியேற்றவேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு இந்தியா இணங்கியதாகவும் தெரிவித்த ராஜபக்ஸ ஆனால் இது இறுதி நிமிடத்தில் தான் நடந்ததாகவும் குறிப்பிட்டார்.

தேர்தலில் ‘றோ’ வின் பின்னணி குறித்து பாகிஸ்தானின் ‘டோன்’பத்திரிக்கை மற்றும் ‘சீனாவின் சௌத் சீனா மோர்னிங் ஸ்டார் ‘ பத்திரிகை ஆகியவற்றுக்கு அளித்த பேட்டிகளில் கூறியிருந்தபோதிலும் , இப்போது தான் முதல் தடவையாக தன்னை பதவியில் இருந்து அகற்றுவதற்கான இந்த சூழ்ச்சி இரண்டு வருடங்களுக்கு முன்னரே தொடங்கியிருந்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

“மோடி ஆட்சிக்கு வந்து கொஞ்ச காலம் தான் , ஆனால் இந்த விடயம் இரண்டு வருடங்களுக்கு முன்னரேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.