செய்திகள்

என்ன நடக்கிறது அமெரிக்காவில்? ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன. வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. உலக அளவில் அமெரிக்கா தான், கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 28 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 612 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.உலக அளவில் இத்தாலி (17,127 பேர்), ஸ்பெயின் (14,045 பேர்) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (12,790 பேர்) மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.(15)