செய்திகள்

எப்போதும் முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவராக களம் இறங்க விரும்புகிறேன்: டி வில்லியர்ஸ்

முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவே களமிறங்குவதற்கு தான் விரும்புவதாக தென்னாபிரிக்காவின் ஏ.பி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிராக அபார சதமொன்றை பெற்ற பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
நான் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவே விளையாடவே விரும்புகிறேன். இருபதிற்கு இருபது போட்டியில் விளையாடியதில் இருந்தே முதல் மூன்று வீரர்களில் ஒருவராக களம் இறங்கி விளையாட விரும்புகிறேன். என்னை 3-வது வீரராக களம் இறக்கிய பெங்களூர் அணிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய போட்டியில் இதுதான் சிறந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை. இதற்கு முன் விளையாடியதை விட சிறப்பாக விளையாட வேண்டும். அதன்படி என்னுடைய திறமை வெளிப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்
பெங்களூர் அணி இந்த தொடரின் தொடக்கத்தில் டி வில்லியர்சை 4-வது அல்லது 5-வது வீரராக களம் இறக்கியது. அந்த போட்டிகளில் 28 46 41 14ஓட்டங்களை அவர் எடுத்தார். இதில் ஒரு போட்டியில்தான் அந்த அணி வெற்றி பெற்றது. பின்னர் 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார். அப்போது 47 57 2 21 47 133 என ஓட்டங்களை அவர் குவித்துள்ளார். இந்த 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும்தான் பெங்களூர் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.