செய்திகள்

எமக்கு எதிராக சேறு பூசப்படுகின்றது!– மஹிந்த ராஜபக்ச

தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் நேற்றைய தினம் மேல் மாகாணசபையின் சில உறுப்பினர்கள் மஹிந்தவிற்கு புதுவருட வாழ்த்து சொல்லச் சென்றிருந்த போது ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

2014ம் ஆண்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டது என்பதனை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சீனாவிற்கு அடுத்தபடியாக இலங்கையில் 2014ம் ஆண்டில் அபிவிருத்தி ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

துறைமுகத்தில் பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சிக் காலத்தில் 5 பில்லியன் வருமானம் ஈட்டிய போதிலும் தற்போது 15 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது.

பல தொழிற்சங்கங்கள் இந்த ஆண்டில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.நாம் முன்னெடுத்த சில அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அதனை வரவேற்கின்றோம்.

நாடு வீழ்வதனை நாம் விரும்பவில்லை, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என விரும்புகின்றோம்.சேறு பூசினாலும் அரசாங்கத்திற்கு உண்மையை எதிர்நோக்க நேரிடும்.

பனாமா ஆவணங்கள் பற்றி என்ன சொன்னார்கள் தற்போது யாருடைய பெயர்கள் வெளியாகியுள்ளன.எதிர்காலத்தில் இவ்வாறான உண்மைகள் மேலும் வெளியாகும்.

ஜெனீவா பிரச்சினை முடிந்தது என யார் சொன்னது, இந்த அரசாங்கத்தைக் கொண்டு ஜெனீவா தரப்பினர் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வாகள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

n10