செய்திகள்

எமக்கே வெற்றி என்கிறார் சரத்குமார்!

நடைபெறவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி மற்றும் சரத்குமார் அணி என நடிகர் சங்கம் தற்போது இரு பிரிவுகளாக பிரிந்து சங்கத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேட்டி அளித்த நடிகர் சரத்குமார் வெற்றி தங்களுக்கே என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் –
‘நடிகர் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எங்களை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் இருப்பது போல தெரிகிறது. எனினும் நாளைக்கே சூழ்நிலைகள் மாறலாம் இன்று கருத்து வேறுபாட்டுடன் மோதிக் கொண்டவர்கள் நாளை சகோதரர்களாக மாறலாம். நாளையே நடிகர் சங்கம் மீண்டும் ஒற்றுமையாக மாறக் கூடிய சூழல் கூட இங்கு உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.