செய்திகள்

எமது இனத்தின் விடிவுக்கு கல்விச் சமூகத்தின் பங்களிப்பு அவசியம் : பிரசன்னா இந்திரகுமார்

எமது இனம் பலவடுக்களைதாங்கிக் கொண்டிருக்கும் இனம், இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் இனம், பலவகையில் பின்தள்ளப்பட்ட இனம். இந்த நிலையில் இருந்து எமது சமூகத்தை முன்னோக்கிச் செல்வதற்கு எமது சமூகத்தை ஊக்குவிப்பதற்கு கல்விச் சமூகங்கள் முன்வந்து உதவவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புகல்குடா சிங்காரத்தோப்பு சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டுஉரையாற்றும் போதேஅவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைமாணவர்களுக்குமட்டுமல்லாதுஅனைவரினதுஅறிவுவளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கித்திற்கும் உடற்பயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவேதான் பாடசாலைகளில் இவ்வாறானவிளையாட்டுகள் மூலம் அவைஊக்குவிக்கப்படுகின்றன.

இன்றுஎமதுநாட்டில் பலர் பலநோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். எமதுநாட்டுசனத்தொகையில் 65 வீதத்திற்கும் மேல் நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எமதுஉடல் ஆரோக்கியத்தினால் மட்டுமேநாம் நோய்களைத் தடுக்கமுடியும் அதுமட்டுமல்லாதுதற்போதுஎமதுஉணவகள் அனைத்தும் நச்சுத் தண்மையுடையனவாகமாறிக் கொண்டேவருகின்றன.

தற்போதையநிலையில் கிழக்குமாகாணத்தில் எமதுதமிழ் பிரதேசங்களில் கல்விநிலையில்வீழிச்சியேகாணப்படுகின்றது. நாம் எமது 30 வருடகாலபோராட்டத்தில் கல்விஉட்படசகலதையும் இழந்துதற்போதுகல்வியின் பெறுமதியைஉணர்ந்துஅந்தநிலையினைஅடைவதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இன்றுஎமது இனம் கல்வியில் மட்டும் பின்நோக்கிச் செல்லவில்லை பல திணைக்களங்களில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களை நோக்கும் போது எமதுசமுகத்தினர் குறைவாகவே இருக்கின்றனர். இவையெல்லாம் எமது கல்வி நிலையின் பின்னடைவினாலேயே ஏற்பட்டவை.

எனவே இவற்றைஉணர்ந்துநாம் எமதுசிறார்களின் கல்விக்கு முதலிடம் கொடுத்து அதனை ஊக்குவித்து எமதுசிறார்களை வளர்க்க வேண்டும்.

ஒருஆட்சிமாற்றம் இடம்பெற்றமையினாலேயே நாம் இந்த இடங்களில் வந்திருக்கின்றோம். இதற்கு முன்னைய அரசாங்ககாலத்தில் நாம் எவற்றில் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டோம் என்பது எமது மக்கள் நன்கு அறிவார்கள். எமதுதமிழ் தேசியக் கூட்டமைப்பினை அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் சில அரசஅதிகாரிகள் கூட புறக்கணித்தார்கள் ஆனால் எமதுமக்கள் என்றும் எம்மைபுறக்கணித்ததில்லை.

அவர்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மங்காத ஒளியுடன் இருந்துகொண்டே இருக்கும். அந்தவகையில் இந்தஆட்சிமாற்றத்திற்காக ஒத்தழைத்த மக்களை எண்ணி நாம் பெருமை கொள்வதோடு அவர்களுக்குஎன்றும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.

எனவே எமது இனம் பலவடுக்களை தாங்கிக் கொண்டிருக்கும் இனம், இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் இனம்,பல நசுக்கல்களுக்கு மத்தியில் பல புறக்கணிப்புகள் பாதிப்புகளை சந்தித்த இனம்,பலவகையில் பின்தள்ளப்பட்ட இனம் இந்த நிலையில் இருந்துஎமது சமுகத்தை முன்னோக்கிச் செல்வதற்குஎமது சமுகத்தை ஊக்குவிப்பதற்குகல்விச் சமுகங்கள் முன்வந்து உதவவேண்டும் என்றுதெரிவித்தார்.

DSC00508 DSC00523 DSC00531 DSC00536