செய்திகள்

எமது புலனாய்வு துறை விழிப்புடனேயே இருக்கின்றது : இராணுவ பேச்சாளர்

தேசிய பாதுகாப்புக்கு எந்த வழியிலும் அச்சுறுத்தல் கிடையாது எனவும் இலங்கையின் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவு எப்போதும் அவதானத்துடனேயே இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிக்கேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எந்த வகையிலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது. ஒவ்வொரு வாரமும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு தரப்புக்குமிடையே கலந்துரையாடல்கள் நடக்கும். எமது படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் எப்போதும் அவதானத்துடனேயே செயற்படகின்றனர்.
விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை  அந்த இயக்கம் ஆரம்பித்த நாளிலிருந்து செயற்படுகின்றது. 2009ற்கு பின்னரும் அது செயற்பாட்டில்தான் இருக்கின்றது. ஆனால் நாம் எப்போதும் அது தொடர்பாக அவதானத்துடனேயே இருக்கின்றோம். என தெரிவித்துள்ளார்.