செய்திகள்

எமது பொருட்களை சர்வேதசரீதியில் சந்தைப்படுத்துதல்

கடந்த சில வருடங்களில், நவீன வர்த்தக உலகம் பல மாற்றங்களை கண்டு வந்துள்ளது. அந்த வகையில், நுகர்வோரின் இரசனை தன்மையானது வித்தியாசமான புதியதொரு பரிணாமத்தினை அடைந்துள்ளது. முன்னைய காலங்களினை போலல்லாமல், நுகர்வோர் சூழலுக்கு கேடு விளைவிக்காத, ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பொருட்களை அதிகளவில் கொள்முதல் செய்வதினை நாம் காணக்கூடியதாக உள்ளது. வர்த்தக உலகில் உருவாக்கப்படும் புதுமைகளும் அந்த வகையிலான ஒரு பரிணாமத்தினை பெற்று இருப்பதனை நாம் காண கூடியதாக உள்ளது. பல்தேசிய நிறுவனங்கள் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் உள்ள நுகர்வோரின் தனித்தன்மை மிகுந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முனைப்புடன் இயங்கி வருகின்றன. இதற்கான ஒரு காரணம் இருக்குமென்றால் அது 80% நுகர்வோர் உலகின் வறிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் மட்டுமே வசித்து வருகின்றார்கள் என்பதாகும். இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இயங்கி வருகின்ற பல்தேசிய நிறுவனங்கள் இவ்வாறு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் உள்ள நுகர்வோரின் தனித்தன்மை மிகுந்த தேவைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்குவதோடு மட்டுமல்லாமல் தமது தேசிய உற்பத்திகளை உலக சந்தைத்தரத்திற்கு ஏற்றவாறு செப்பனிட்டு ஒரு பல்தேசிய கேள்வியினை உருவாக்குவதில் வல்லுனர்களாக உள்ளார்கள். இந்தியாவானது ஒரு தேசிய ரீதியிலான பொருளாதார புரட்சியினை நோக்கி நகர்ந்து செல்வது கண்கூடு.

sam-44

எனது இந்த கட்டுரையின் நோக்கமானது ஈழ தமிழர்களாகிய நாம் எவ்வாறு ஒரு பொருளாதார ரீதியிலான புரட்சியினை நோக்கி முன்நகர முடியும் என்பது பற்றிய எனது பார்வையினை இங்கு பதிவு செய்வதேயாகும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் எத்தகைய பங்களிப்பினை இதற்காக செய்ய முடியும்?
கைத்தொழில் துறையினை வடக்கு கிழக்கில் மேம்படுத்துவதும் எமது உற்பத்திகளை சர்வதேச அங்கீகாரம் பெற்ற Tesco, Sainsbury’s, Asda  போன்ற supermarket களில் சந்தைபடுத்துவதும் பல அரிய பொருளாதார வாய்ப்புக்களை எமக்கு ஈட்டித்தரும் என்பது மட்டுமல்லாமல் எமது தனித்துவத்தினையும் வெளிக்கொண்டுவர உதவும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே குறிபிட்டது போல, நவீன காலத்து நுகர்வோர் Green concept  உடைய மற்றும் ‘Creativity’ இனை வெளிக்கொணரும் பொருட்களினை கொள்முதல் செய்வதிலேயே அதிக நாட்டம் கொண்டுள்ளனர். பனை மூலம் செய்யப்படும் கைவினை பொருட்கள் சூழலுக்கு உகந்தவை என்பது மட்டுமல்லாமல் பல ஆக்கபூர்வமான வினைத்திறன்களை வெளிப்படுத்தி நிற்பவையுமாகும். இவற்றிற்கு சர்வதேச சந்தைகளில் நிச்சயமான வரவேற்பு உண்டு.
sam-45

எமது தேசிய உற்பத்தியான பனங்கள்ளு எம்மவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மற்றைய இனத்தவர்கள் மத்தியிலும் பிரசித்தம் அடைவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. மேலும், எமது பாரம்பரியத்தினையும் தனிதன்மையினையும் வெளிக்கொண்டு வரக்கூடிய பல பொருட்கள் சிறந்த சந்தைபடுத்தல் மற்றும் விளம்பர நுட்பங்களின் ஊடாக சிறந்ததொரு கேள்வியினை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போதைய சூழலில் எமது பொருட்கள் எம்மவர்கள் மத்தியில் மட்டுமே சந்தைப்படுத்தபடுகின்றன. எமக்கு அதிகளவிலான பொருளாதார மற்றும் சமூக வெற்றி எப்போது கிட்டுமெனில் எமது பொருட்கள் சர்வதேச சமூகத்தினரை சென்றடையும் போது தான். செவ்வரத்தம் பூ பானம், நல்லெண்ணெய், கறுத்த கொழும்பான் மாம்பழம், செவ்விளநீர் எண்ணை, கதலி வாழைபழம், மூலிகை மருந்துகள் என்பன அத்தகைய அதியுயர் கேள்வியினை உருவாக்க வல்லன. ஒலிவ் எண்ணையினை போன்றே நல்லெண்ணையும் ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த குண நலன்களை உடையது என்பது விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்ட விடயமாகும்.
sam-48

இப்போது இருக்கும் வர்த்தக சூழலானது எமது தேசிய உற்பத்திகளை வெளிக்கொண்டு வரவும் நமக்கான புதிய கேள்வி ஒன்றினை உலக சந்தையில் உருவாக்குவதற்கு ஏற்றதுமான காலப்பகுதியாகும்.
எனவே புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெரியளவிலான கைத்தொழில் மூலதனங்களை எமது மண்ணில் ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் சிறந்த வலையமைப்புக்களை உருவாக்கி கொள்வதும் அத்தியாவசியமாகின்றது. உற்பத்திகளை புலத்தில் இருந்து கொண்டு வருவது, அவற்றினை சர்வதேச அங்கீகாரம் பெறும் வகையில் தரப்படுத்துவது மற்றும் வுநளஉழஇ றுயடவஅயசவ போன்ற ளரிநசஅயசமநவ களில் அவற்றினை காட்சிப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறுவது போன்ற சவால்மிக்க பணிகளை புலம்பெயர் வலையமைப்புகள் பொறுப்பேற்று நடத்த வேண்டும். இதற்கான பணியினை தொடங்குவதற்கு மிக பொருத்தமான சந்தர்பம் இதுவேயாகும்.