செய்திகள்

எமது மே தினக் கூட்டத்திற்கான அழைப்பை மஹிந்த ஏற்றுக்கொண்டார்: தினேஷ் குணவர்தன

மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்களால் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக மஹஜன எக்ஷத் பெரமுன கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்தி;பபொன்றிலேயே தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்கள் பலவும் இணைந்து கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம் அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக நாம் அறிகின்றோம். என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.