செய்திகள்

எமது வெற்றி உறுதியானது தேசிய அரசாங்கம் அமைக்கும் நோக்கம் எம்மிடம் கிடையாது : நிமல் சிறிபால

தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை தமக்கு ஏற்படாது எனவும் ஐக்கிய மக்கள்  சுதந்திர கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவது உறுதியானதெனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிப் பெறுவது உறுதி இந்நிலையில் தேசிய அரசாங்கம் என்ற பேச்சுக்கே எம்மிடம் இடமில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்குத்தான் தோல்வி பயம் இருக்கின்றது. அதனால் தான் தேசிய அரசாங்கம் தொடர்பாக கதைக்கின்றது. எமது வெற்றி உறுதியானது என்பதால் யாரும் தேசிய அரசாங்கம் தொடர்பாக எம்மிடம் யாரும் கேள்வியெழுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.