செய்திகள்

எமிரேட்ஸ் விமானம் அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறங்கியது

அவுஸ்திரெலியாவிலிருந்து டுபாய் நோக்கி பயணித்த விமானமொன்று இன்று அதிகாலை அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஏ 380 என்ற விமானமே இவ்வாறு கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமனத்தில் பணியாளர்கள் உட்பட 510 பேர் இருந்ததாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு மேலான வான் பரப்பில் பறந்துக்கொண்டிருந்தபோது விமானத்துக்குள் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாகவும் இதனை தொடர்ந்து அதிகாலை 3.50 மணியளவில் அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும். அதில் இருந்த பயணிகள் விமான நிலையத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.