செய்திகள்

எம்பிலிபிட்டிய நகர சபைத் தலைவர் இராஜினாமா

எம்பிலிப்பிட்டிய நகர சபை தலைவர் வண. வேவல்துவ ஞானபிரபா தேரர் நகர சபை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவித்தலை சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளூராட்சி மன்ற அமைச்சருமான மஹிபால ஹேரத் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைக்கமைய வண. வேவல்துவ ஞானபிரபா தேரரின் ஒருசில தவறுகளால் நகர சபையில் இடம்பெற்றுள்ள ஊழல் குறித்து குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் உரிய காலத்தில் அதற்கான பதில் ஏதும் வழங்கவில்லை.

பதில் வழங்குவதற்கு போதிய கால தவணைகள் வழங்கப்பட்ட போதிலும் அவர் அது குறித்து கவனத்தில் கொள்ளாது, பிழையான முறையில் நடந்துகொண்டதன் காரணத்தால் அவர் நகர சபை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேற்படி எம்பிலிப்பிட்டிய நகர சபை தலைமை பொறுப்புக்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நகரசபை உப தலைவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.