செய்திகள்

எம்.பி. பதவியை மீளப் பெற்றுத் தாருங்கள்: நீதிமன்றத்தை நாடும் பொன்சேகா

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஆசனத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

தமது பாராளுமன்ற ஆசனத்தை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயந்த கெட்டகொடவை நீதிமன்றத்திற்கு அழைத்து பாராளுமன்ற ஆசனத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான காரணத்தை கேட்டறியுமாறும் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே தமக்கு எதிரான வழக்குகளில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் வென்றெடுத்த பாராளுமன்ற ஆசனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தகமை தமக்குள்ளதெனவும் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.