செய்திகள்

எயர் ஏசியா விமானத்தின் 2 பாகங்கள் கண்டுபிடிப்பு 30 சடலங்களளும் மீட்பு

ஜாவாக் கடலில் வீழ்ந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் இரண்டு பெரிய உடைந்த பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசியாவில் தேடுதலில் ஈடுபட்டுள்ள அணியினர் நம்புகின்றனர்.

ஜாவாக் கடலில் வீழ்ந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் இரண்டு பெரிய உடைந்த பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசியாவில் தேடுதலில் ஈடுபட்டுள்ள அணியினர் நம்புகின்றனர்.

சுமார் 10 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாகங்கள் கடல்படுக்கையில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டதாக இந்தோனேசிய அவசரகால பணிகளுக்கான அமைச்சு கூறியுள்ளது.

வெள்ளியன்று, எண்ணெய் திட்டொன்று அவதானிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இந்த பாகங்கள் காணப்படுகின்றன.

இந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை, தேடுதலில் ஈடுபட்டுள்ள அணிகளுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

கடந்த ஞாயிறன்று 162 பேருடன் ஏர்ஏசியா விமானம் காணாமல்போனது. குறைந்தது 30 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.