செய்திகள்

எயர் ஏசியா விமான விபத்து மீட்பு பணி தாமதம்

எயர் ஏசியா விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் மோசமான காலநிலை காரணமாக தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை ஏழு உடல்கள் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளன, கடல்கொந்தளிப்பாக காணப்படுவதால் ஆழ்கடலுக்குள் சென்றுதேடுதலை மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானத்தின் மேற்பாகத்தையும், கறுப்புபெட்டியையும் மீடபதற்காக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பலரின் உடல்கள் விமானத்தின் மேற்பாகத்தினுள் காணப்படலாம்,என மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.