செய்திகள்

எயார் லங்கா தலைவர் மீது குற்றவியல் வழக்கு தொடரத்திட்டம்

வெலியமுன அறிக்கை எயார் லங்கா தலைவரும், ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரருமான நிஷாந்தவுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தொடர பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த வாரம் விமானசேவை தொடர்பான ஆராய்வு அறிக்கை சட்டத்தரணி வெலியமுன தலைமையில் நடைபெற்று இறுதி அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதன் அடிப்படையில் நிஷாந்த மீது குற்றவியல் வழக்குகள் போடலாம் எனவும் இவ்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்துடன் மகிந்தவின் குடும்பம் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது.