செய்திகள்

எரிபொருள் விலைகளையும் உயர்த்துமாறு கோரிக்கை!

எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டுமென இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31 ஆம் திகதியளவில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய உலகச் சந்தையில் விலை அதிகரிப்புக்கு ஏற்றால் போன்று இங்கு எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதன்படி இது தொடர்பில் அமைச்சருக்கு கூறியுள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத் தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
-(3)