செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பால் கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் : பெற்றோல் , டீசல் விலைகள் அதிகரிக்கப்படலாம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு கடந்த 4 மாத காலப்பகுதியில் பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சீர் செய்துக்கொள்ள பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பதற்கு அந்த கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவற்றின் விலையை லீற்றர் ஒன்றுக்கு 14 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதால் 4000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் விலை அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயம் தொடர்டபாகவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிய வருகின்றது.