செய்திகள்

எரியூட்டப்பட்ட சடலமொன்றுடன் நேற்று இரவு ஒருவர் கைது

கொலை செய்து எரிக்ப்பட்ட நபரொருவரின் சடலமொன்றுடன் அதுருகிரிய பகுதியில் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரொன்றில் குறித்த சடலத்தை கொண்டு சென்றுக்கொண்டிருந்த போது வீதியில் காவல் கடைமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அந்த காரை சோதனையிட்ட போது உள்ளே சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்து அரைவாசிக்கு சடலத்தை எரியூட்டி வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் போதே அதனை கண்டு பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காரில் இருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.