செய்திகள்

எரிவாயு கப்பல்கள் அடுத்த மாதமே இலங்கை வரும்!

சமையல் எரிவாயு கப்பல்கள் வரும் தினம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 5 மற்றும் 12 ஆம் திகதிகளில் குறித்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பல்களில் 7,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிவாயு கப்பல்கள் வரும் வரையில் நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிவாயு விநியோகம் நடைபெறுகின்றது.

-(3)