செய்திகள்

எலிக்கு பின்! வடிவேலு புதிய பிளான்

தெனாலிராமன் படத்தை தொடர்ந்து, வைகைப் புயல் வடிவேலு – யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த படம் எலி.

இந்தப் படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவு பகலாக இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடிக்கிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் போன்று உளவாளியான வடிவேலு செய்யும் காமெடி அட்டகாசம் தான் எலி படத்தின் கதையாம்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளை கவரும் படியான காமெடி காட்சிகள் படத்தில் நிறைந்து இருக்கும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிகின்றன. இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வடிவேலுவைத் தேடி ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம்.

ஆனால், அவர் எந்த கதையையும் ஒப்புக்கொள்ளவில்லையாம். இப்போதைக்கு தன்னுடைய முழு கவனமும் ‘எலி’ ரிலீஸில் மட்டுதான் இருக்கிறாராம். தவிர, யுவராஜுடன் வடிவேலுவுக்கு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளதால், தனக்கான இன்னொரு கதையையும் தயார் செய்யச் சொல்லியிருக்கிறாராம். அது ‘எலி’க்கு அடுத்த படமாக இல்லையென்றாலும், மீண்டும் யுவராஜுடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்பதுதான் வடிவேலுவின் திட்டமாம்.