செய்திகள்

எலி படத்தின் கதை பிடித்துள்ளது: சதா

நடிகர் வடிவேலுவுடன் தெனாலிராமன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும், ஆனால் எலி படத்தின் கதை பிடித்ததால் அதில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை சதா. தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ஜெயம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சதா.

தமிழ், தெலுங்குப் பட உலகில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்த சதா, இந்தி, கன்னட மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இடையில் சில காலம் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த சதா, தற்போது நடிகர் வடிவேலு ஜோடியாக எலி படத்தில் நடித்து வருகிறார்.