செய்திகள்

எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட உள்ளூராட்சி வட்டாரங்களின் விபரங்கள் விரைவில் வர்த்தமானியில் வெளியாகும்

எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்ட உள்ளூராட்சி வட்டாரங்களின் விபரங்களை இம்மாதத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ள உள்ளுராட்சி வட்டாரங்கள் தொடர்பான பட்டியலை பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும்  அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய பணிகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் அந்த அறிக்கையை மீளாய்வு செய்து மாவட்ட செயலாளர்கள் தயாரித்துள்ள அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு வட்டாரங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்