செய்திகள்

எல்லை மீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும்: இலங்கை கடற்படை

இலங்கை கடற் பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும்  என கடற்படை பேச்சாளர் கொமான்டர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின்படி கடற்படை தளபதியின் ஆலேசானைக்கிணங்க இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்படி சட்ட விரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய படகுகள் கைப்பற்றப்படும் என்பதுடன் மீனவர்களும் கைதுசெய்யப்படுவர் எனவும் இதற்காக விசேட ரோந்து நடவடிக்கைகளில் கடற் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு கடற் பரப்பில் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான மீன்களை இந்திய மீனவர்கள் பிடித்து  செல்வதாகவும் , இந்தியாவில் நடைபெற்ற இரு நாட்டு மீனவ பிரதி நிதிகளின் பேச்சு வார்த்தையின் பின்னர் மாத்திரம் எல்லை மீறி மீன் பிடித்த 37 மீனவர்கள் 25 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மீன் பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.