செய்திகள்

எழுக தமிழா எதற்குத் தயக்கம்?!

எழுக தமிழா
எதற்குத் தயக்கம்?!
உன் உரிமைகள் இன்றேல்
நீ வெறும் நடைப்பிணம் !
அழுவதை விடுத்து…
அனல் பிழம்பென எழும்பு!
அறுபடும் அறுபடும்
உன்கையின் அடிமை விலங்கு !

தொழுது வாழ்வது…
உன் இனத்திற்கு இழுக்கு !
தூய தமிழாராய் ..
உன் விடிவுக்கு முழக்கு!-ஈழ
நிலத்தில் நீ நின்று
முழக்கும் ஒலியால்
புலத்து தமிழரின்…
நீள் துயில் கலையட்டும் !

களத்தில் வேங்கைகளின்
வேட்டொலி கேட்டு…
கதி கலங்கிய பகைவர்
உன் உரிமை முழக்கம் கேட்டு
மீண்டும் கலங்கட்டும் !
எழுக தமிழிது மக்களின் எழுச்சி!
எழுந்து நீ சென்றால்… எதிர்போர்க்கு மிரட்சி !
புரிந்து தோள்கொடு இது இன்னொரு புரட்சி !

கொற்றவை