செய்திகள்

எவன்ட்கார்ட் சம்பவத்தை மூடிமறைக்க தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி : ராஜித சேனாரட்ன

எவன்ட் கார்ட் சம்பவத்தை மூடி மறைக்குமாறு கோரி தனக்கு 20 மில்லியன்  ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சிகள் இடம்பெற்றதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் அரசாங்க  தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவ்வாறு லஞ்சம்  கொடுக்க முயற்சித்த நபரின் மாதாந்த வருமானம் 450 மில்லியன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது யார் லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தனது நண்பர் ஒருவர் மூலம் லஞ்சம் வழங்க முயற்சிக்கபட்டது . நண்பர் என்பதால் பெயர் கூற முடியாது .ஆனால் ஆதாரத்திற்கான குரல் பதிவு உள்ளது என தெரிவித்துள்ளார்.