செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை பிரிட்டன் தீவிரப்படுத்த வேண்டும்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை பிரிட்டன் தீவிரப்படுத்தவேண்டும் என அந்த நாட்டின் பாதுகாப்பு தெரிவுக்குழு வேண்டுகொள் விடுத்துள்ளது.
குறிப்பிட்ட அமைப்பிற்கு எதிராக இதுவரை பிரிட்டன் 6 வீத விமான தாக்குதல்களையே மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள குறிப்பிட்ட குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஆச்சரியமும், கரிசனையும் வெளியிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கிலிருந்து உலகநாடுகளின் பாதுகாப்பிற்கு கடந்த பல வருடங்களில் உருவாகிய அச்சுறுத்தல்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே மிகவும் அச்சுறுத்தலானது,பிரிட்டன் அந்தஅமைப்பிற்கு எதிரான போராட்டத்தில் அதிகளவான பங்களிப்பை வழங்கவேண்டும், வழங்க முடியயும், எனினும்,பிரிட்டன் இதுவரை தெளிவான இராணுவ தந்திரோபாயமொன்றை முன்வைக்கவில்லை.என தெரிவிக்கப்பட்டுள்ளது.