செய்திகள்

ஏனையவர்களுடன் அணிசேருமாறு மோடி கூட்டமைப்பை ஊக்கப்படுத்தினார்: எம். ஏ. சுமந்திரன்

அரசியலில் ஏனைய சக்திகளுடன் அணிசேருமாறு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி கூட்டமைப்பை ஊக்கப்படுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார்.

‘ராஜபக்ஸ ஆட்டம் இழக்கையில் இந்தியாவுக்கு ஒன்று சீனாவுக்கு எதுவும் இல்லை’ என்ற தலைப்பில் ராய்ட்டர் செய்திச் சேவை எழுதியுள்ள செய்திக் கட்டுரைக்கு கருத்து வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்துள்ள சுமந்திரன், இந்த மனிதருடன் (ராஜபக்ஸ ) எந்த அலுவலும் செய்ய முடியாது என்று
இந்தியர்கள் உணர்ந்திருந்ததாகவும் ஒரு மாற்றம் ஒன்றுக்கு காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுளார்.