செய்திகள்

ஏப்ரல் 23 க்குப் பின்னர் அவசரமாக தேர்தலுக்குச் செல்ல வேண்டும்: ஐ.தே.க. தீர்மானம்

விகி­தா­சார தேர்தல் முறை­மையின் அடிப்­ப­டையில் ஏப்ரல் 23 ஆம் திக­திக்கு பின்னர் அவ­ச­ர­மாக பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­கு­ழுவில் நேற்று மீளவும் ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், பாரா­ளு­மன்ற தேர்­தலில் எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது என்பது குறித்தும் நேற்று விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது அடுத்த தேர்­தலில் வெற்­றியை நிலை­நாட்ட வேண்­டு­மாயின் அன்னம் சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட வேண்டும் என்று நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க செயற்­குழு கூட்­டத்தில் யோசனை முன்­வைத்­துள்ளார்.

எனினும் எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது குறித்­தான தீர்­மானம் அடுத்த செயற்­கு­ழு­வி­லேயே எடுக்­கப்­படும் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் நேற்று மாலை அக்­கட்­சியின் தேசிய தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் கூடி­யது.

இந்த செயற்­குழுக் கூட்­டத்­தில் ஐ.தே.க பொதுச் செய­லாளர் கபீர் ஹாஷிம் , தலை­மைத்­துவ சபைத்­த­லைவர் கரு ஜெய­சூ­ரிய உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்க உள்­ளிட்ட கட்சி செயற்­குழு உறுப்­பி­னர்கள் பலர் கலந்து கொண்­டுள்­ளனர்.

தற்­போது பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர் பில் அர­சியல் வட்­டா­ரங்­களில் அதி­க­ளவில் பேசப்­பட்டு வரு­கி­றது. இந்­நி­லையில் ஐ.தே.கட்­சியின் நேற்­றைய செயற்­கு­ழு­விலும் பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர்­பி­லேயே பர­வ­லாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது ஏப்ரல் 23 ஆம் திக­திக்கு பிறகு விகி­தா­சார தேர்தல் முறை­மையின் பிர­கா­ரமே தேர்­த­லுக்கு செல்­ல­வேண்டும் என்று கடந்த மாதம் இடம்­பெற்ற செயற்­குழு கூட்­டத்தில் ஏற்­க­னவே தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. புதிய தேர்தல் முறை­மையை மாற்­று­வ­தற்­கான கால அவ­காசம் போதா­மைக்­கான ் கார­ணத்தை அடிப்­ப­டை­யாக கொண்டே இந்த தீர்­மானம் எடுக்­கப்­ப­ட்டி­ருந்­தது. குறித்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டதன் பின்னர் எதிர்க்­கட்­சி­க­ளினால் பர­வ­லாக எதிர்ப்பு வெளியி­டப்­பட்டு வந்­தது.