செய்திகள்

ஏப்ரல் 23 இல் பாராளுமன்றம் கலைக்கப்படுமா? மைத்திரி, ரணில், சந்திரிகாவே தீர்மானிப்பர்

ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு வழங்குவதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையின் விஷேட கூட்டத்தில் பாராளுமன்றத்தை ஏப்ரல் 23 ஆம் திகதி கலைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதிலும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் உருவாகியிருக்கும் தாமதம் காரணமாக பாராளுமன்றத்ரதக் கலைப்பதை பின்போட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்திவருகின்றது.

இந்த நிலையிலேயே பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பிலான அதிகாரத்தை ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.