செய்திகள்

ஏப்ரல் 23 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி. மத்திய குழு முடிவு

மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி யின் மத்திய குழு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. பாராளுமன்றம் திட்டமிட்டவாறு கலைக்கப்படாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானத்தை ஜே.வி.பி. எடுத்துள்ளது.

தற்போதைய பாராளுமன்றம் ஏப்ரல் மாதத்தில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இவ்வாறு தேர்தல் நடத்தப்பட வேண்டமென அக்கட்சி தெரிவித்துள்ளது.

போலியான வாக்குறுதிகளை அளிக்காது நூறுநாள் திட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கோரியுள்ளது. இது தொடர்பில் மத்திய குழு எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் கட்சி செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.