செய்திகள்

ஏப்ரல் 23 இல் பாராளுமன்றம் கலைப்பு: ஐ.தே.க அரசை நிறுவ தயாராகுமாறு ரணில் வேண்டுகோள்

இவ்வாண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை நிறுவுவதற்கு அனைவரும் இப்பொழுது முதல் கடினமாக பாடுபட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போதே ரணில் விக்கரமசிங்க இதனை தெரிவித்தார்.