செய்திகள்

ஏப்ரல் 24 இல் பாராளுமன்றம் கலைப்பு: ஜூன் மாதத்தில் பொதுத் தேர்தல்

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவுக்கு வந்ததும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து ஜுன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவார் என தெரியவந்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் முடிந்த பின்னர் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை  கையளித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் தலைமையிலேயே பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னேடுத்துச் செல்வதற்கு சிறி லங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது.