செய்திகள்

ஏர் இந்தியா நிறுவன சொத்துக்களை வாங்குகிறது ஸ்டேட் பாங்க்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரசு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா-வின் குடியிருப்பு சொத்துக்களை வாங்குகிறது, நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. இதற்கான முதல் கட்ட ஒப்புதல்கள் பெறப்பட்டுவிட்டதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. தெற்கு மும்பையில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் குடியிருப்புகளை 90 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது இந்த வங்கி.
சொத்து கைமாறியதும் இக்குடியிருப்புகளில் ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர்களுக்கு வீட்டு வசதி அளிக்க திட்டமிட்டுள்ளனர். விமானத் துறை அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்காக இரு நிறுவனங்களும் இப்போது காத்திருக்கின்றன. தெற்கு மும்பையில் பெடார் ரோட்டில் உள்ள 4 பிளாட்களை விற்க கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனம் ஆட்களைத் தேடி வந்த நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இச்சொத்துக்களை வாங்க ஒப்புக்கொண்டது. ஒரு சதுரடி 2,033 ரூபாய் என்ற மதிப்பீட்டில் இச்சொத்துக்கள் விற்கப்படுகின்றன