செய்திகள்

ஏறாவூரில் காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல்போன இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

நேற்று பிற்பகல் சவுக்கடி,பழைய இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள மரம் ஒன்றிலேயே குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு அருந்தியார் வீதியை சேர்ந்த எஸ்.டினேஸ்காந்த்(20வயது)என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து வெளியேறிச்சென்றவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.