செய்திகள்

ஏறாவூரில் தீயில் கருகிய பெண் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியில் தீயில் கருகி களுவன்கேணி சிங்காரத்தோப்பு வீதியைச் சேர்ந்த 23 வயதான சிவராசா கோகிலா இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பெண் சமையல் செய்துகொண்டிருந்தபோது, அடுப்பு தீப்பிடித்ததில் எரிகாயமடைந்திருந்தார். இதன்போது, மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் எரிகாயங்குள்ளானதாகவும் எனினும், அவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தப் பெண், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்