செய்திகள்

ஏறாவூரில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகிலிவெட்டைக் கிராமத்தில்

செவ்வாய்க்கிழமை இரவு 6.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திகிலிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் சுந்தரராஜ் (வயது 42) என்பரே உயிரிழந்தவராவார்.

ஸ்தலத்துக்கு விரைந்துள்ள ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரம தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.