செய்திகள்

ஏறாவூரில் பஸ் மோதி மாணவன் பலி

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் பகுதியில் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் ஓடவியார் வீதியை சேர்ந்த பாடசாலை மாணவன் வயது 14 மாலை நான்கு மணியளவில் பிரத்தியோக வகுப்புக்கு சென்ற வேளையில் ஏறாவூர் நகர் பகுதியில் பிரதான வீதியை மாணவன் கடக்க முற்பட்ட வேளையில் மட்டக்களப்பு இருந்து பொலனறுவை நோக்கி சென்ற இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியில் மோதுண்ட காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

தற்போது மாணவனின் சடலம் ஏறாவூர் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

இவரது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

DSC_0983 DSC_0991