செய்திகள்

ஏழாலை சொர்ணாம்பிகா சமேத அம்பலவாணேசுரர் ஆலய மஹோற்சவம் ஆரம்பம் (படங்கள்)

 ஏழாலை என்ற பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் முதன்மையாகப் போற்றப்படும் புங்கடி சொர்ணாம்பிகா சமேத அம்பலவாணேசுரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் தினமும் காலை 08.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பூசைகள் இடம்பெற்றும்.

இவ்வாலய மஹோற்சவத்தில் சப்பறத் திருவிழா எதிர்வரும் 22 அம் திகதி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கும்,தேர்த்திருவிழா 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கும்,தீர்த்தத் திருவிழா மறுநாள் புதன்கிழமை காலை 11 மணிக்கும் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது. திருவிழாக் காலங்களில் தினமும் மகேஸ்வர பூசையும்(அன்னதானம்) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகர் நிருபர்-

IMG_4501 (1) IMG_4501 IMG_4507 IMG_4509 IMG_4515