செய்திகள்

ஏவுகணை தாக்குதலில் 11 பொதுமக்கள் பலி

ரஷ்ய ஆதரவு கிளாச்சிக்காரர்கள் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைதாக்குதலில் உக்ரைனில் பேருந்து ஒன்று சிக்கியதில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
அரச படையினரின் இலக்கு வைத்து கிளர்ச்சிக்காரர்கள் ஏவிய ஏவுகணை இலக்கு தவறி பேருந்ததை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.

செப்டம்பர் 23 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற மிகமோசமான சம்பவம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சமாதான உச்சி மாநாடு ஒன்றை நடத்துவதற்கான உக்ரைன் ஜனாதிபதியின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.