செய்திகள்

ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருடர்கள்!

தனியார் வங்கியொன்றின் ஏடிஎம்  இயந்திரமொன்​றை கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற சம்பவமொன்று கம்பளை பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (24) இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-(3)