செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆராய லண்டனில் மாநாடு

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து 22 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் லண்டனில் கூடி ஆராயவுள்ளனர்.
குறிப்பிட்ட அமைப்பிற்கு எதிராக விமானதாக்குதல்களை மாத்திரம் மேற்கொள்வது போதுமானதல்ல என குறிப்பிட்டுள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் பிலிப் ஹமன்ட்,பிரிட்டன் சந்திப்பின் போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு உறுப்பினர்கள் சேர்வதை தடுப்பது, நிதிவளத்தை முடக்குவது, அந்தஅமைப்பிற்கு எதிரான போராட்டத்திற்க மேலும் ஆயுத உதவிகளை வழங்குவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த மாநாட்டிற்காக லண்டன் புறப்படுவதற்கு முன்னர் கருத்துதெரிவித்துள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன்கெரி,வன்முறைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் செயற்பாடுகள் அந்த அமைப்பிற்கு எதிரான போராட்டத்தில்ஈடுபட்டுள்ள நாடுகளை மேலும் ஐக்கியப்படுத்தியுள்ளதுடன்,உறுதிப்பாட்டை மேலும் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து சிரியா மற்றும் ஈராக்கிற்கு போராடச்செல்பவர்கள் குறித்தே இந்த மாநாட்டில் முக்கியமாக ஆராயப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.